அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவரின் கால் விரல்கள் துண்டானது


அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவரின் கால் விரல்கள் துண்டானது
x

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவரின் கால் விரல்கள் துண்டானது.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் காந்தி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த விஜயகுமாரின் மகன் நிஷாந்த்(வயது 15). இவர் அத்தாணியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து எதுமலை நோக்கி சென்ற அரசு பஸ்சில் நிஷாந்்த் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கிய நிலையில் பயணித்தார். மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது தவறி கீழே விழுந்ததில் நிஷாந்தின் இடது காலில் நான்கு விரல்கள் துண்டானது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story