24 நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வினியோகம்குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என ஆய்வு
திருவண்ணாமலையில் முன்னோட்டமாக 24 நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வினியோகக்னகப்பட்டு குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என ஆய்வு நடந்தது.
திருவண்ணாமலையில் முன்னோட்டமாக 24 நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வினியோகக்னகப்பட்டு குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என ஆய்வு நடந்தது.
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார். காலை 8.15 மணிமுதல் 8.50 மணிக்குள் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் தனி சமையற்கூடம் ஏற்படுத்தப்படுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் வருகிற 15-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள 24 பள்ளிகளில் இத்திட்டம் வரும் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தொகுப்பு சமையல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதைமுன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான முன்னோட்டமாக பரிசோதனை நேற்று நடந்தது. மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் நேற்று காலை 7 மணியளவில் சிற்றுண்டி தயாரித்தனர். அப்போது உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா?, உரிய நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த உணவு தரமாக உள்ளதாக என நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து வேன்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு சென்றடைகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.