இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்...!


இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்...!
x

இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(வயது58) பணியாற்றி வந்தார். இவர் ரோந்துப்பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு திடீரென இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடன் இருந்து போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story