கரூரில், குப்பை கிடங்கில் திடீர் தீ
கரூரில், குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
கரூர், வடிவேல் நகர் பகுதிக்குட்பட்ட ஸ்ரீ அம்மன்நகர், புதூர், எம்.ஜி.ஆர்.நகர், எல்.ஆர்.ஜி.நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பஸ் பாடி கழிவுகள், ரப்பர் கழிவுகள் அப்பகுதியில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையில் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் மலைபோல் குவிந்த குப்பை எரிந்து அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story