மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே குப்பையில் திடீர் தீ
மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே குப்பையில் ஏற்பட்ட தீயை பொதுமக்கள் அணைத்தனர்.
கரூர்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வீடு, கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பைகள், விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்பட்டு பின்னர் மாட்டுத்தொழுவத்தில் கிடந்த கழிவுகளையும், சருகுகளையும் தினசரி கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக தார்சாலையோரத்தில் கரும்புதோகை, சருகுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தது. இந்தநிலையில் நேற்று அந்த கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பக்கெட்டுகளில் தண்ணீரை கொண்டு வந்து சருகுகளில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகே உள்ள வீடுகளுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story