நீலிவனநாதர் கோவில் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் திடீர் தீ


நீலிவனநாதர் கோவில் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் திடீர் தீ
x

நீலிவனநாதர் கோவில் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கல்வாழை பரிகாரம் செய்வதற்காகவும், எமதர்மனை தரிசனம் செய்வதற்காகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் வெளிப்புற வளாகத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் மண்டபம் புதிதாக கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் நேற்றிரவு திடீரென புகை வந்ததால், கோவில் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அருகே இருந்த பொதுமக்கள் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அவர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையே சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பார்வையிட்டனர். இது பற்றி நடந்த விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியது தெரியவந்தது. தீப்பற்றி எரிந்தபோது அங்கு பக்தர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story