சாந்தநாத சாமி கோவில் அருகே அரசமரத்தில் திடீர் தீ


சாந்தநாத சாமி கோவில் அருகே அரசமரத்தில் திடீர் தீ
x

சாந்தநாத சாமி கோவில் அருகே அரசமரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் பிரசித்தி பெற்ற சாந்தநாத சாமி கோவிலின் அருகே பழமையான அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் சிறிய அளவிலான விநாயகர் சிலை, நாகர் சிலைகள் உள்ளிட்டவை உள்ளன. அங்கு பக்தர்கள் சூடமேற்றி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் மரத்தின் அடிப்பகுதியில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளிவந்து தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பழமையான அரசமரத்தில் தீப்பிடித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story