டீக்கடை முன் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகையில் திடீர் தீ


டீக்கடை முன் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகையில் திடீர் தீ
x

டீக்கடை முன் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் டீக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடை முன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து டீ குடிக்க வசதியாக கீற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அந்த கீற்றுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக வந்து தீயை அணைத்ததால் கீற்றுக்கொட்டகை தவிர மற்ற இடங்களுக்கு தீ பரவவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அதே நேரம் கீற்றுக்கொட்டகையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இருந்த நபர்கள் சிகரெட் புகைத்துவிட்டு அணைக்காமல் வீசியதால் தீப்பிடித்ததா? என்று தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story