கணினி உதிரிபாகங்கள் குடோனில் திடீர் தீ


கணினி உதிரிபாகங்கள் குடோனில் திடீர் தீ
x

கணினி உதிரிபாகங்கள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

கணினி உதிரி பாகங்கள்

திருச்சி மார்சிங்பேட்டை ரோடு மேலப்புதூர் பகுதியில் கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பின்புறத்தில் உள்ள ஒரு குடோனில் கணினி உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. இந்த அறையில் இருந்து நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அருகில் இந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை பூட்டி விட்டு ஓடினர்.

ேமலும் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட அலுவலர் அனுசியா, உதவி மாவட்ட அலுவலர் ஆரோக்கியராஜ், நிலைய அலுவலர் நாகவிஜயன் மற்றும் 2 தீயணைப்பு வாகனங்களுடன் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தீயை அணைக்க போராட்டம்

அப்போது குடோனில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உள்ள சென்று தீயை அணைக்க முயன்றனர். அங்கு கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மூழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாலை நேரம் என்பதால் பள்ளிகள் விட்டவுடன் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மேலப்புதூரில் இருந்து பீமநகர் வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கார்களை மேலப்புதூர் ரெயில்வே சுரங்க பாலம் வழியாக திருப்பி விட்டனர்.

வாக்குவாதம்

4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த பார்க்க அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடினர். இதில் போக்குவரத்து போலீசார் கூட்டத்தை கலைந்து போகும்படி கூறினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கணினி உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story