குவிந்து கிடந்த குப்பைகளில் திடீர் தீ
குவிந்து கிடந்த குப்பைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
திருக்காடுதுறை பகுதியில் சாலையோரத்தில் பல்வேறு வகையான ஏராளமான குப்பைகள் குவிந்து கிடந்தது. இந்த குப்பை நேற்று திடிரென தீப்பிடித்து எரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.அதேபோல் காகித ஆலை-புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைப்பகுதியில் கொட்டி கிடந்த குப்பைகளில் எரிந்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்துகளால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story