ஆவின் இனிப்பு வகைகள் திடீர் விலை உயர்வு - இன்று முதல் அமல்
ஆவின் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை,
ஆவின் நிறுவனம் கடந்த ஜீலை மாதம் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அறிவித்தது. தற்போது, ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,
* 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.
* 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது.
* 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்ந்துள்ளது.
* 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.
* 100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்ந்துள்ளது.
* 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.
* 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது.
* 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.