காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டம்
x

களக்காட்டில் சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காட்டில் சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

களக்காடு நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் களக்காடு காவல்தெருவை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று புகார் தெரிவித்தும், சீரான குடிநீர் வழங்க கோரியும், களக்காடு நகராட்சி அலுவலகத்தை நேற்று காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆவேசமடைந்த பெண்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சேரன்மாதேவி-பணகுடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகளை அழைத்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story