நாமக்கல் நகராட்சி பகுதியில்கூடுதல் இயக்குனர் விஜயகுமார் 'திடீர்' ஆய்வு
நாமக்கல் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அறிவுசார் மையம் பணிகள் முழுமையாக முடிந்துள்ளதா? என நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து தினசரி சந்தை பகுதியில் உள்ள நுண்உரம் தயார் செய்யும் இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் முதல்-அமைச்சரின் காலை உணவு தயார் செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், அப்பகுதியை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக பொறியாளர் மகேந்திரன், நாமக்கல் நகராட்சி பொறியாளர் சண்முகம், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் கண்ணன், மேலாளர் கோபிநாத், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.