குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமரா


குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமரா
x

குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமரா கொண்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

சென்னையில் போலீசாருக்கு உற்ற நண்பனாக இருப்பது 3-வது கண் எனும் கண்காணிப்பு கேமராக்கள். குற்ற சம்பவங்கள் நடந்தால் முதலில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சென்னை போலீசார் சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதில் ஒரு புதிய முயற்சியாக குன்றத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு கேமராவை வைத்து இன்ஸ்பெக்டர் சந்துரு புதிய முயற்சி மேற்கொண்டார். இதில் பணிக்கு வரும் போலீசார் ரோந்து வாகனங்களை வைத்து முறையாக ஏரியாவில் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா? வாகனம் எங்கு உள்ளது என்பதை அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் தனது செல்போனில் வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்காணித்து விடுகிறார். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பிரச்சினை ஏற்படும் இடங்களில் சம்பந்தப்பட்ட ரோந்து வாகனம் சென்றால் அங்கு நிலைமை என்னவாக உள்ளது என்பதை இருந்த இடத்திலிருந்து கண்டறிந்து உடனடியாக கூடுதல் போலீசாரை அங்கு அனுப்புவதும் இன்ஸ்பெக்டரும் அங்கு விரைந்து செல்வதும் உறுதுணையாக இருப்பதாகவும் இதுபோல் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீஸ் வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள ரோந்து வாகனங்களிலும் கொண்டு வரும் முயற்சி நடந்து வருவதாகவும் முதல் கட்டமாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ரோந்து வாகனத்தில் கொண்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் இந்த புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story