கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்


கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

கோயம்புத்தூர்

கோவை

3 குழந்ைதைகளை தவிக்க விட்டு, விட்டு கள்ளக்காதலனுடன்இளம் பெண் ஓட்டம் பிடித்தார்.

கள்ளக்காதல்

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம் பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அவர் தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

அதிர்ச்சி

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் தனது மனைவி மற்றும் 2½ வயது பெண் குழந்தை மாயமாய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினார்.

ஓட்டம்

அப்போது இவர்கள் இளம்பெண் தனது 2½ வயது குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து இளம் பெண்ணின் கணவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்னை தேடி வருகின்றனர்.


Next Story