பேக்கரி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்


பேக்கரி கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 22 Oct 2022 1:00 AM IST (Updated: 22 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பேக்கரி கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை சத்யா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). இவர் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கடையில் இருந்தபோது வாலிபர் ஒருவர் கல்லா பெட்டியில் இருந்து 500 ரூபாயை திருடி உள்ளார். இதனை கண்ட கார்த்திகேயன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர், மோளப்பாடியூரை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சதீஷ்குமார் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.





Next Story