பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் சாவு


பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் சாவு
x

பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.

தூணில் ஏற முயன்றார்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அயோத்தியாபுரி பட்டணத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 61). அவருடைய மகன் ராம்குமார் (28). திருமணம் ஆகாத இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள தனது அக்காள் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார். ஆனால் டிக்கெட் கிடைக்காததால் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவர் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் கதவை திறப்பதற்கு அவர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் புதிதாக செங்கற்களால் கட்டப்பட்டு வரும் தூணை பிடித்துக் கொண்டு மேலே ஏறி உள்ளார்.

சரிந்து விழுந்து சாவு

இதில் எதிர்பாராதவிதமாக தூண் கீழே சரிந்து விழுந்தது. மேலும் அந்த தூணின் மேல் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட் மேற்கூரையும் கீழே சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ராம்குமார் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story