தீக்குளித்து வாலிபர் சாவு


தீக்குளித்து வாலிபர் சாவு
x

தீக்குளித்து வாலிபர் சாவு

தஞ்சாவூர்

மதுக்கூர் மாதுரார் குடியிருப்பு தெருவை சேர்ந்தவர் பெரமாயி என்கிற பிரேமாவதி. இவரது 2 மகன்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இந்தநிலையில் நேற்று வீட்டில் இல்லாத நேரத்தில் பிரேமாவதி மூத்த மகன் வைரமணி(வயது31) மனநிலை சரியில்லாத காரணத்தால் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீயில் கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வைரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரேமாவதி கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story