கோத்தகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
கோத்தகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கிராமம் மெட்டுக்கல் பகுதியை சேர்ந்த மணி. இவரது மகன் சிவமுருகன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கலாமணி என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். சிவமுருகன் குடகூரில் இருக்கும் தனக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பஞ்சு மரத்தில் ஏறி உள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். கீழே இருந்த கல்லின் மீது விழுந்ததால் அவருக்கு தலை உள்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.