மேட்டுப்பாளையத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


மேட்டுப்பாளையத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x

மேட்டுப்பாளையத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தை மைதானத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவர் மனோஜ் (வயது 28). இவர் நேற்று தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே மனோஜ் சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை இடது புறமாக முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க மனோஜ் பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மனோஜ் லாரியில் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காட்சி அங்கிருந்த அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story