கும்பலாக தாக்கியதில் வாலிபர் சாவு


கும்பலாக தாக்கியதில் வாலிபர் சாவு
x

கும்பலாக தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார். இந்த கொலை வழக்கில் பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி

கும்பலாக தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார். இந்த கொலை வழக்கில் பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தகராறு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி சேர்வைக்காரதெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் பள்ளபட்டி தொழிற்பேட்டையில் உள்ள பெல்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

கடந்த 9-ந் தேதி பெருமாள்பட்டி மந்தையில் மணிகண்டனின் மாமா மகன் ஆனந்த குமாரும், அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஜீவாவும் தகராறு ெசய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த மணிகண்டன் சண்டையை விலக்கி விட்டார். அப்போது ஜீவா, நீ யாரு சண்டை விலக்கி விடுவதற்கு, நீ அவ்வளவு பெரிய ஆளா உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்தநிலையில் அரசு நடுநிலைப்பள்ளி முன்பு மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா மீண்டும் மணிகண்டனிடம் தகராறு செய்தார். மேலும் ஜீவாவின் தந்தை ராமமூர்த்தி, தாய் லலிதா மற்றும் உறவினர்கள் ராஜசேகர், சிவா, சூரிய கலா, சரண்யா, சரத், அஜித் ஆகிய 8 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக கட்டை, கம்பு, கம்பியால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்து ஜீவா, ராமமூர்த்தி, லலிதா, ராஜசேகர், சூரியகலா, சரண்யா, சரத், அஜித் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story