விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 45). இவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சூரியமணல் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் வில்சன்ராஜ் (35) என்பவர் ஜெயங்கொண்டத்தில் இருந்து சூசையப்பர்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வில்சன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சிவகுமார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் வில்சன்ராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகுமார் பலத்த காயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வில்சன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.