தலைவாசல் அருகே விபத்தில் வாலிபர் பலி
தலைவாசல் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
சேலம்
தலைவாசல்,
தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி சம்போடை கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் ரமேஷ் (வயது 36), விவசாயி, இவர் நேற்று சார்வாய் கிராமத்தில் இருந்து சாத்தப்பாடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் விரைந்து சென்று ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story