சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
சேத்துப்பட்டு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
சேத்துப்பட்டு பேரூராட்சி கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு (வயது 25), கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அப்பு மோட்டார்சைக்கிளில் நாடகம் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். கெங்கைசூடாமணி அருகே சேத்துப்பட்டு -ஆரணி சாலையில் வரும்போது வளைவில் திரும்ப முயன்றார்.
தடுப்புச்சுவரில் மோதி பலி
அப்போது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.