மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மேடாதியதில் வாலிபர் பலியானார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் வாலிபர் பலயதில் வாலிபர் பலியானார்.

சேத்துப்பட்டு அருகே கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் விஜய் அரசன் (வயது 30). இவர் மோட்டார்சைக்கிளில் நேற்று மாலை வேலை முடிந்து கங்காபுரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். பெரிய கொழப்பலூர் கூட்ரோடு அருகே வந்தபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மினி வேன் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயட் அரசனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு போலீசாருக்கு தெரிவித்து 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story