மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x

மேலூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் இறந்தார்.

மதுரை

மேலூர்,

சிவகங்கை மாவட்டம் கிளாதிரியை சேர்ந்தவர்கள் மாணிக்கம் (வயது 21), ராதாகிருஷ்ணன் (21). நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் மேலூருக்கு வந்தனர். திருவாதவூர் கோவில் அருகில் வந்தபோது நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணிக்கம் தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story