மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

திருவண்ணாமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 31), பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார்.

இவர் சம்பவத்தன்று ஆடையூரில் இருந்து இனாம்காாியந்தல் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story