மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவர் முதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிளில் நின்று பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தூரி கிராமத்தை சேர்ந்த முனியசாமி, சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். முனியசாமி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story