திருமங்கலம் அருகே சிக்கன் சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து சாவு


திருமங்கலம் அருகே சிக்கன் சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து சாவு
x

திருமங்கலம் அருகே சிக்கன் சாப்பிட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

மதுரை

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடு்த்த கள்ளிக்குடி அருகே வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் இதயக்கண்ணன் (வயது 24). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பியவர், அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் மற்றும் காளான் சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து இரவு தூங்கச் சென்றுள்ளார். அப்ேபாது வயிற்று வலி அதிகமாகி வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கள்ளிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இதயக்கண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை வெங்கடசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story