ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் சிதறி சாவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் சிதறி இறந்தார்.
ராணிப்பேட்டை
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் சிதறி இறந்தார்.
லத்தேரி-காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது தக்கவர் காட்பாடி ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயிலில் பயணம் செய்தவர் தவறி விழுந்து இறந்து கிடந்தார். அவரது உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் கிடந்தது.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மாநிறம் உடையவர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story