உளுந்தூர்பேட்டை அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


உளுந்தூர்பேட்டை அருகேஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

அரியலூர் மாவட்டம் கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் வினோத்குமார் (வயது 32). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, கரும்புச்சாறு கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தைக்கு திதி கொடுப்பதற்காக மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மனைவியுடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று சென்னைக்கு புறப்பட்டார். மனைவி ரெயில் பெட்டி இருக்கையில் அமர்ந்திருந்தார். வினோத்குமார் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே வந்தபோது வினோத்குமார் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுதெரியாமல் அவருடைய மனைவி ரெயிலில் சென்று கொண்டிருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து வினோத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், இதுபற்றி அவருடைய மனைவிக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். கணவன் இறந்தது தெரியாமல் விழுப்புரம் வரை சென்ற அவரது மனைவி விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வினோத்குமார் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story