காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் கனியப்பா (வயது 23). கூலித்தொழிலாளியான இவரும் சுப்புலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கனியப்பா சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்தாக கூறப்படுகிறது. இதனால் கோபித்து கொண்டு சுப்புலட்சுமி தனது தாயார் வீடான குலசேகரமங்கலம் கிராமத்திற்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த கனியப்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கனியப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுந்தரி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.