அரசு பஸ் மோதி சைக்கிளில் சென்ற வாலிபர் பலி


அரசு பஸ் மோதி சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற வாலிபர் இறந்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மயில்ராஜ் (வயது 30). இவர் கேரளாவில் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊரான ஆலங்குளத்திற்கு வந்த மயில்ராஜ் நேற்று முன்தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கனரா வங்கி அருகே சென்றபோது நெல்லையில் இருந்து சுரண்டை வழியாக புளியங்குடி செல்வதற்காக வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும், மயில்ராஜின் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மயில்ராஜ் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார், மயில்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் வாசுதேவநல்லூரை சேர்ந்த முத்துராமலிங்கத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



Next Story