தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்


தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
x

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

கொலையா?

லால்குடி அருகே காட்டூரில் ஒரு வங்கி அருகில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து சற்று தூரத்தில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவலறிந்த விருத்தாசலம் ெரயில்வே போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும் இது குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர் எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

*கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி நீலமங்கலத்தை சேர்ந்தவர் மணிரத்தினம் (வயது 30). இவர் போர்வெல் குழாய் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை வேலை நிமித்தமாக திருச்சிக்கு வந்தார். திருச்சி-திண்டுக்கல் சாலையில் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அவர் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மணிரத்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜிம் வழக்குப்பதிவு செய்து, அவர் மீது மோதிய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தினார்கள். அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் திடீர் சாவு

*சிவகங்கை மாவட்டம் பள்ளித்தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (53). இவர் தனது நண்பரான ரத்தினம் என்பவருடன் திருச்சி தீரன் நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்ய வந்தார். இந்நிலையில் 15 அடி உயரத்தில் ஏணியில் ரத்தினம் ஏறி வீட்டிற்கு பெயிண்டிங் அடித்துள்ளார், மலைச்சாமி கீழே ஏணியை பிடித்துக் கொண்டு நின்றார். அப்போது திடீரென மலைச்சாமிக்கு வலிப்பு வந்துள்ளது. இதனால் அவரது கை, கால்கள் இழுத்து கீழே விழுந்துள்ளார். அப்போது ஏணியையும் எட்டி உதைத்துள்ளார். இதில் ஏணியின் மீது நின்ற ரத்தினம் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தினத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குட்டையில் ஆண் பிணம்

*திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை ஐயம்பட்டி சாலை பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் உள்ள குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நவல்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அப்பகுதியில் சுரேஷ் என்பவர் காணாமல் போனது குறித்து தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட அவரது மனைவி இறந்தவர் உடலை பார்த்துவிட்டு, அது சுரேஷ் இல்லை என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story