உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்


உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 11 May 2023 1:15 AM IST (Updated: 11 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரை அருகே உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

மதுக்கரை

மதுக்கரை அருகே உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணமாக கிடந்த வாலிபர்

கோவை சுந்தராபுரம்-மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது.

இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், போத்தனூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்த வினித் என்ற ஆசிக் (வயது 22) என்பது தெரியவந்தது.

கொலையா? தற்கொலையா?

மேலும் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

வினித்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 வயதில் குழந்தை உள்ளது. மேலும் வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி வினித் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார். இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வினித், வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் அங்குள்ள தனியார் கல்லூரி அருகே மீட்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்?, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா?, கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story