கஞ்சா பொட்டலம் வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா பொட்டலம் வைத்திருந்த வாலிபர் கைது
x

கஞ்சா பொட்டலம் வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் ஆகியோர் மணவாளங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரித்தில் அவர் திருமயம் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24) என்பதும், அவரிடம் 700 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிமாறனை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story