கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று காட்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ்தாஸ் (வயது 22) என்றும் அவர் பையில் 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story