மணம்பூண்டியில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை


மணம்பூண்டியில்     வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது;   போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணம்பூண்டியில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

அரகண்டநல்லூர்,

கஞ்சா கடத்தல்

அரகண்டநல்லூர் அருகே மணம்பூண்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களது உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அவரை 20-க்கும் மேற்பட்ட போலீசார் துரத்தி சென்று மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 31 ) என்பது தெரிந்தது.

கைது

மேலும் அவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருவண்ணாமலையில் வாடகை வீடு ஒன்றில் பதுக்கி வைத்து திருக்கோவிலூர் பகுதிகளில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அதன்படி வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தி வந்தபோது அவர் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து மோகன்ராஜை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.. தொடர்ந்து மோகன்ராஜூடன் தொடர்பில் இருந்த கஞ்சா வியாபாரிகள் யார், யார் என்பது பற்றி அவரிடம் போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மீது திருட்டு, கொள்ளை உள்பட 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1 More update

Next Story