வால்பாறையில் பெட்டிக்கடையில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்


வால்பாறையில் பெட்டிக்கடையில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெட்டிக்கடையில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). இவர் அந்தப்பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று அந்த கடைக்கு பாரளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் வந்துள்ளார். அப்போது சந்தோஷ் கேட்ட பொருளை ரமேஷ் எடுத்துக் கொடுத்து விட்டு அவர் சென்ற பிறகு பெட்டிக்கடை கல்லாப் பெட்டி மீது வைத்திருந்த மணிப்பர்சை பார்த்த போது அதில் இருந்த ரூ.3 ஆயிரத்து 200 காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து ரமேஷ் வால்பாறை போலீஸ்சில் புகார் அளித்தார். அதன்பேரில் வால்பாறை போலீசார் வால்பாறை தபால் நிலையம் முன்புறமுள்ள போலீசாரின் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப் போது சந்தோஷ் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தை திருடியது சந்தோஷ் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தோசை போலீசார் கைது செய்தனர்.


Next Story