யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
கோவையில் யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கே.ஜி.சாவடி
கோவையில் யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
யூடியூபர்
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுஹைல் (வயது29). இவர் சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாபினா, இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.
சுஹைல் கோவை கே.ஜி.சாவடி பிச்சனூர் பகுதியில் 4 மாதங்க ளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறினார். இவர் தனது வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப நிகழ்வுகள், சிறுவர்களின் விளையாட்டு தொடர்பாக வீடியோ எடுத்து தனது யூடியூப் பக் கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் சொந்த வீடு, 2 கார்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியாக வாழ்ந்து வருவதாக தெரி வித்து உள்ளார்.
கொள்ளை முயற்சி
இந்த நிலையில் காலை 6 மணிக்கு சுஹைலின் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே சுஹைல் கதவை திறந்த போது மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் உள்ளே புகுந்தார்.
அவர் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அறிந்த கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அனுராம் (25), என்பதும், யூடியூப் மூலம் சுஹைல் அதிக பணம் சம்பாதித்து உள்ளதாகவும், அதை கொள்ளையடிக்கும் நோக்கில் புதுச்சேரியில் இருந்து அனுராம் கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.
மாடியில் தூங்கினார்
அனுராம் நள்ளிரவு 1.30 மணியளவில் சுஹைலின் வீட்டுக்கு வந்து மாடியில் ஏறி இரவு முழுவதும் படுத்து தூங்கியுள்ளார். அவர் காலை 6 மணிக்கு எழுந்துவீட்டின் கதவைத் தட்டி கத்தியுடன் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராமை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.