ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

திருச்சி

திருச்சி-சென்னை ரெயில்வே வழித்தடத்தில் அரியமங்கலம் அருகே உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் இருந்ததால் அவர் யார்?. ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முசிறியை அடுத்த சந்தனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் நிதிஷ்குமார் (23). இவர் கோவில் திருவிழாவுக்காக உறவினர்களை அழைத்து வருவதாக டி.புதுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் புலிவலம் ரோட்டில் தனியார் அரிசி ஆலை அருகே வந்தபோது, குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story