காதலித்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


காதலித்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

காதலித்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டையை அடுத்த மகாதேவி கிராமத்தை ேசர்ந்த சுப்பிரமணியனின் மகன் ராஜ்குமார்(வயது 23). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமாரும், ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகவும், சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார், அந்த பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அந்த பெண் சாணிபவுடர் குடித்து மயங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


Next Story