பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல் நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சரண்ராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி.
இவர் பிளஸ்-2 முடித்த பள்ளி மாணவியை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பள்ளி மாணவியின் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும் என சரண்ராஜ் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்போது அங்கு பிறந்த நாள் கொண்டாடிய போது ஆசை வார்த்தைகள் கூறி மாணவியிடம் அவர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
4 மாத கர்ப்பம்
இந்த நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவரது பெற்றோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.
அங்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவியிடம்
இதுகுறித்து பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.