பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது


பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது
x

கலவை அருகே பெண்ணுடன் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த கலவைப்புதூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி துளசிதேவி மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவரது எதிர் வீட்டில் வசிக்கும் உதயகுமார் என்பவர், அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் துளசி தேவியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உதயக்குமார் சென்று, இந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறி தகராறு செய்துள்ளார். மேலும் உன் வீட்டையும், உன்னையும் ஒழித்து விடுவேன் என்று மிரட்டி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து துளசிதேவி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து, உதயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story