உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது


உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:46+05:30)

திருக்கோவிலூர் அருகே உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள நேமாலூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்தமநாதன் மகன் ஜான்பிரிட்டோ(வயது 31). இவர் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் ஜான்பிரிட்டோவின் வீட்டிற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஜான்பிரிட்டோ போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் பின்னால் துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்தனர். அப்போது உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து ஜான்பிரிட்டோவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? விலங்கு, பறவைகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்ததப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story