Normal
15 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
விருத்தாசலத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன்(வயது 21). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் விருத்தாசலம் சென்று வீரமணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை வீரமணிகண்டன் திருமணம் செய்ததும், தற்போது அந்த சிறுமிக்கு ஆண்குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
கைது
இதுகுறித்து சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாரதி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வீரமணிகண்டன் மீது போக்சோ சட்டத்தி்ன் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story