வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த வாலிபர் கைது
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு
வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு பகுதியில் ராதாபுரம் அருகே உள்ள பூமலை காப்பு காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனவர் சியாமளா, வனக்காப்பாளர்கள் அருள்மொழி மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது திருவண்ணாமலை கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சூர்யா, திருவண்ணாமலை தாலுகா குன்னியந்தல் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் ஜெய்சங்கர் (வயது 23) ஆகியோரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயார் செய்து அதில் கோழி இறைச்சி தடவி பூமலை காப்பு காட்டில் வனவிலங்கு வேட்டையாடுவதற்காக காத்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத நிலையில் நாய் ஒன்று அந்த வெடிகுண்டை கடித்து விட்டது. அதில் குண்டு வெடித்ததில் வாய் சிதறி நாய் இறந்தது. நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சத்தம் கேட்டு வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர்.
அவர்களில் வனத்துறையினர் ஜெய்சங்கர் என்பவனை துரத்தி பிடித்தனர். மற்றொருவரானசூர்யா என்பவரை பிடிக்கும் சென்ற போது போது தப்பி தலைமறைவாகி விட்டார்். அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர் என்பவரிடமிருந்து 55 நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கரை சிறையில் அடைத்தனர்.