பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது


பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது
x

பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

மதுரை


மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 36), தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் 24-க்கும் மேற்பட்ட பெண்களும் 25-க்கும் மேற்பட்ட ஆண்களும் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களில் ஒருவர் தாசில்தார் நகர் பகத்சிங் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனியாக செல்வதை பார்த்து பின் தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்து அவரை தவறான இடத்தில் தொட்டு சித்ரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மேனேஜர் ஆனந்தமுருகனிடம் கூறியுள்ளார். அதற்கு அடுத்தநாள் அந்த வாலிபர் அந்தப்பெண்ணை எதிர்பார்த்து அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே காத்திருந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டு நிறுவன மேனேஜர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மேனேஜர் ஆனந்த முருகனை ஆபாசமாக பேசி தாக்கினார். இதை பார்த்த அந்த நிறுவன ஊழியர்களும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, அந்த வாலிபர் யாகப்பா நகர் பாலாஜி தெருவை சேர்ந்த நாட்ராயன் (36) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story