சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 18 July 2023 6:46 PM GMT (Updated: 19 July 2023 9:21 AM GMT)

போளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

சிறுமி பாலியல் பலாத்காரம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

20 ஆண்டு சிறை

இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள இசுகழிகாட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவ் வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்த சாமுவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story