காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 23). டிரைவரான இவருக்கும், 20 வயதான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் சாந்தகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் சாந்தகுமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சாந்தகுமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story